எரிபொருள் விலையேற்றம் காரணமாக 600 பல நாள் படகுகள் குறைந்த எரிபொருளைப் பயன்படுத்தி இலங்கைக்கு அருகில் உள்ள கடலில் மீன்பிடிக்கச் செல்கின்றன என்று தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கையைச் சுற்றி 23 மீன்பிடித் துறைமுகங்கள் உள்ளன. மீன்பிடி மற்றும் நீரியல் வளத் திணைக்களத்தின் கீழ் 5 ஆயிரத்து 500 பலநாள் மீன்பிடிப் படகுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவர்களில் சுமார் ஆயிரத்து 600 பேர் வங்காள விரிகுடாவின் வடக்கு பகுதியில் அரபிக்கடலின் வடக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் பயணம் செய்கின்றனர்.
பல நாள் கடல் மீன்பிடிப் படகின் ஒரு பயணத்திற்கு 8 ஆயிரம் முதல்-12 ஆயிரம் லீற்றர் டீசல் தேவைப்படுகிறது. ஆனால் எரிபொருள் விலையேற்றம் காரணமாக தூர கடற்பரப்பில் மீன் பிடிக்க சென்ற மீன்பிடி படகுகள் தற்போது இலங்கை மற்றும் மாலத்தீவுக்கு அருகில் உள்ள கடற்பரப்பில் மீன்பிடிக்கும் நிலைக்கு மாறியுள்ளன.
இந்த பகுதியில் மீன்பிடி படகுகள் அதிகளவில் இருப்பதால் மீன் உற்பத்தியும் குறைந்துள்ளது என்று மீனவர்கள் கூறுகின்றனர்.