நிராகரிக்கப்பட்ட நியமனங்களை ஏற்றுக்கொள்ளுமாறு உத்தரவு !

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக நிராகரிக்கப்பட்ட சுமார் 37 வேட்புமனுக்களை மீண்டும் ஏற்றுக்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட தேர்தல்அதிகாரிகளுக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (ஏப்ரல் 04) உத்தரவிட்டது.

அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்கள் தங்கள்வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து தாக்கல் செய்த ரிட் மனுக்களைஆராய்ந்த பிறகு, மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் பதில் தலைவர் மொஹமட்லாபர் தாஹிர் மற்றும் கே.பி. பெர்னாண்டோ ஆகியோர் அடங்கியமேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் அமர்வு இந்த உத்தரவைப் பிறப்பித்தது.

Share this Article