நாவாந்துறையில் சிறுவர்களை கடத்த முயன்றவர் மடக்கிப் பிடிப்பு!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

யாழ்ப்பாணம் – நாவாந்துறைப் பகுதியில் சிறுவர்களை கடத்த முயன்றார் என்ற குற்றச்சாட்டில் அப்பகுதி மக்களால் நபர் ஒருவர் மடக்கி பிடிக்கப்பட்டு, யாழ்ப்பாணப் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

நாவாந்துறை பகுதியில் இன்றைய தினம்(மே 16) செவ்வாய்க்கிழமை காலை இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மக்களால் ஒப்படைக்கப்பட்ட நபரை பொலிஸார், பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

எனினும் இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Share this Article