புங்குடுதீவு பத்தாம் வட்டாரம் கண்ணகை அம்மன் வீதியை பிறப்பிடமாகவும் , பிரான்ஸ்சினை வதிவிடமாகவும் கொண்டிருந்த அமரர் சுப்பையா சபாரத்தினம் அவர்களது பிறந்த தினத்தினை முன்னிட்டு அண்மையில் அன்னாரது நினைவாக அவரது பெறாமகன் திரு. கருணாகரன் நாவலன் ( வேலணை பிரதேச சபை உறுப்பினர் ) அவர்களின் 35000 ரூபாய் நிதியுதவி ஊடாக புங்குடுதீவு , வேலணை மற்றும் கரம்பொன் பகுதிகளில் வாழ்கின்ற பொருண்மியம் நலிவுற்ற இருபத்தைந்து குடும்பங்களுக்கு உலருணவு பொதிகள் வழங்கிவைக்கப்பட்டன.
இச்செயற்பாடுகளில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் உறுப்பினர்களான கருணாகரன் குணாளன் , சண்முகராஜா தரங்கன் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்