நாடளாவிய ரீதியில் நாளை புதன்கிழமை (பெப். 12) மின்வெட்டுஅமுல்படுத்தப்படாது என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
பெப்ரவரி பெளர்ணமியை முன்னிட்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகஇலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
நாடளாவிய ரீதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (பெப். 08) ஏற்பட்ட திடீர்மின்வெட்டு காரணமாக நுரைச்சோலை நிலக்கரி மின்னுற்பத்தி நிலையத்தில்செயலிழந்த மூன்று மின்னுற்பத்தி இயந்திரங்களையும் மீண்டும் மின்னுற்பத்திகட்டமைப்பில் இணைப்பதற்கு பல பகுதிகளில் மின்வெட்டை அமுல்படுத்தஇலங்கை மின்சாரசபை தீர்மானித்திருந்தது.
அதன்படி, நாட்டில் பல பகுதிகளில் நேற்று திங்கட்கிழமை (பெப். 10) மின்வெட்டுஅமுல்படுத்தப்பட்டதுடன் இன்றைய தினமும் மின்வெட்டுஅமுல்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.