நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு யாழ்ப்பாண நீதிமன்றத்தால் பிடியாணை!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், சார்ள்ஸ் நிர்மலநாதன் மற்றும் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் சிவாஜிலிங்கம் ஆகியோருக்கு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சுதந்திர தினமான கடந்த பெப்ரவரி 4 ஆம் நாளை கரிநாள் என்று அறிவித்து போராட்டம் இடம்பெற்றது.

செல்வம் அடைக்கலநாதன், சார்ள்ஸ் நிர்மலநாதன், எம்.கே. சிவாஜிலிங்கம் மற்றும் யாழ். மாநகர சபை முன்னாள் முதல்வர் வி. மணிவண்ணன் ஆகியோருக்கு எதிராக யாழ்ப்பாண பொலிஸாரால் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.

இந்த வழக்கில் அவர்கள் பிணையில் விடுவிக்கப்பட்ட நிலையில் வழக்கு விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.

Share this Article