நாகப்பட்டினம் – காங்கேசன்துறை கப்பல் சேவைக்கு இந்தியாவின் நிதியுதவி மேலும் ஓராண்டுக்கு நீடிப்பு

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

நாகப்பட்டினம் – காங்கேசன்துறை இடையிலான பயணிகள் கப்பல் சேவைக்கான நிதியுதவியை இந்திய அரசு மேலும் ஓராண்டுக்கு நீடித்துள்ளது. 2024 ஆகஸ்டில் சேவை மீண்டும் ஆரம்பிக்கப்பட்ட பின்னர் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக இந்த உதவி வழங்கப்படுகிறது.

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் தகவலின்படி, Viability Gap Funding திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு சுமார் ரூ.300 மில்லியன் நிதியுதவி வழங்கப்படுகிறது. பயணக் கட்டணத்தை மலிவாக வைத்திருப்பதுடன், சேவையின் முக்கிய செயல்பாட்டு மற்றும் தளபாடச் செலவுகளை ஈடுசெய்வதும் இதன் நோக்கமாகும்.

சேவை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து இதுவரை சுமார் 52,000 பயணிகள் இதனைப் பயன்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், 65 மில்லியன் அமெரிக்க டொலர் இந்திய மானிய உதவியுடன் காங்கேசன்துறை துறைமுகத்தை புனரமைக்கும் திட்டமும் முன்னெடுக்கப்படவுள்ளது. எதிர்காலத்தில் புதிய கடல்வழிப் பாதைகள் மற்றும் சேவைகளை ஆராயவும் திட்டமிடப்பட்டுள்ளது.

Share this Article
Leave a comment