எரிபொருள் விலையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்று இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. நேற்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதற்கமைய, ஒக்டேன் 92 ரக பெற் றோல் லீற்றர் ஒன்றின் விலை 10 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது.
ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 356 ரூபாவாக இருந்த நிலையில், புதிய விலை திருத்தத்துக்கு அமைய 346 ரூபாவாகக் குறைக்கப்பட்டுள்ளது.
அத்துடன், ஒக்டேன் 95 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 3 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. ஒக்டேன் 95 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 423 ரூபாவாக இருந்த நிலையில், புதிய விலை திருத்தத்துக்கு அமைய 426 ரூபாவாக அதிகரிக்கப் பட்டுள்ளது.
அதேபோல், ஒட்டோ டீசல் லீற்றர் ஒன்றின் விலை 27 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. ஒட்டோ டீசல் லீற்றர் ஒன்றின் விலை 356 ரூபாவாக இருந்த நிலையில், புதிய விலை திருத்தத்துக்கு அமைய 329 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது.
மேலும், சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 3 ரூபாவால் அதிகரிக்கப்பட் டுள்ளது. சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 431 ரூபாவாக இருந்த நிலையில், புதிய விலை திருத்தத்துக்கு அமைய 434 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் விலை 2 ரூபாவால் குறைக் கப்பட்டுள்ளது. மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் விலை 249 ரூபாவாக இருந்த நிலையில், புதிய விலை திருத்தத்துக்கு அமைய 247 ரூபாவாகக் குறைக்கப்பட்டுள்ளது.