நல்லூர் கந்தன் தேர்த் திருவிழாவின் போது வருடாந்தம் இடம்பெறும் நயினை – நல்லூர் பஜனை திருத்தல யாத்திரை இவ்வருடமும் பக்திபூர்வமாக இடம்பெற்றது.
கடந்த வியாழன் (ஆகஸ்ட் 29) அன்று நயினை நாகபூசணி அம்மன் ஆலயத்தில் இருந்து புறப்பட்ட பஜனை குழுவினர் குறிகாட்டுவான் , புங்குடுதீவு, வேலணை, மண்கும்பான், அல்லைப்பிட்டி, பண்ணை , யாழ்ப்பாணம், வில்லூண்டி, கந்தர்மடம் ஊடாக இன்று (செப்.01) நல்லூரை சென்றடைந்து கந்தக்கடவுளின் தேர்பவனியோடு இணைந்து கொண்டனர்.
தேர்த்திருவிழா நிறைவின்போது வேல் அர்ச்சனை செய்து தங்களின் யாத்திரையினை இனதே முடித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.