தொலைபேசி திருட்டில் ஈடுபட்டவர் யாழில் கைது!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

யாழில் தொலைபேசி திருட்டில் ஈடுபட்ட இருவர் புலனாய்வு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளதோடு திருடப்பட்ட தொலைபேசியும் மீட்கப்பட்டுள்ளது.

தொலைபேசி பறிகொடுத்தவர் வழங்கிய தகவலின் அடிப்படையில் சந்தேகநபர்கள் யாழ் மாவட்ட பொலிஸ் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கபட்டுள்ளனர்.

நேற்று முன்தினம் (ஜூன் 27) பரமேஸ்வராச் சந்தியில் கடையொன்றில் தொலைபேசி திருட்டு இடம்பெற்றது.

சிசிரிவி கமரா உதவியுடன் சந்தேகநபரை யாழ்ப்பாணம் பொலிஸார் கைது செய்தனர். அவரிடம் தொலைபேசி எதுவும் கிடைக்கவில்லை. தெரியாத நபர் ஒருவருக்கு தொலைபேசியை 10000/=ரூபாவிற்கு விற்றுள்ளார்.

நேற்று தொலைபேசி திருத்துமிடத்திற்கு குறித்த சந்தேக நபர் தொலைபேசியுடன் வந்த பொழுது யாழ் மாவட்ட பொலிஸ் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்தனர்.

Share this Article