தையிட்டி விகாரை வழிபாட்டிற்கு இடையூறு விளைவிக்க கூடாதென மல்லாகம் நீதிமன்று கட்டளை

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read
தையிட்டி விகாரை வழிபாட்டிற்கோ , விகாரையில் இடம்பெறும் உற்சவத்திற்கோ எந்தவித இடையூறும் ஏற்படுத்தக் கூடாது என்று மல்லாகம் நீதிமன்று கட்டளையாக்கியுள்ளது.
பலாலி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் உள்ளிட்ட ஐவரின் பெயர்கள் குறிப்பிட்டு மல்லாகம் நீதவான் நீதிமன்று கட்டளை வழங்கியுள்ளது.
ஒவ்வொருவரும் அமைதிக்கு பங்கம் விளைவிக்காத வகையில் செயற்பட வேண்டும். விகாரையின் முகப்பிலையோ , பாதையிலையோ தடைகளை ஏற்படுத்த கூடாது. விகாரை வழிபாட்டிற்கு வரும் மக்களுக்கோ, விகாரையில் நடைபெறும் உற்சவங்களுக்கோ இடையூறு ஏற்படுத்தக் கூடாது என நீதிமன்று கட்டளையாக்கியுள்ளது.
அதேவேளை திறந்தவர்களது உரித்து ஏதேனும் பாதிக்கப்பட்டு இருப்பின், உரிய நீதிமன்றில் வழக்கொன்றைத் தாக்கல் செய்து உரிய நிவாரணத்தை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் மன்று அறிவுறுத்தியுள்ளது.
அத்துடன் குறித்த வழக்கு எதிர்வரும் 11எஆம் திகதி மன்றில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படும் என மன்று திகதியிட்டு உள்ளது.
Share this Article