தேசியப்பாடசாலையாக தரமுயர்த்தப்பட்டுள்ளது நெடுந்தீவு மகாவித்தியாலயம்.
1000 பாடசாலைகளை தேசிய பாடசாலைகளாகத் தரமுயர்த்துதல் வேலைத்திட்டத்தின் கீழ் யாழ் மாவட்டத்தில் 2021 ஆம் ஆண்டிற்காக 10 பாடசாலைகள் தேசிய பாடசாலைகளாக தரமுயர்த்தப்பட்டுள்ளன.
இதிலும் குறிப்பாக தீவக கல்வி வலயத்தில் 04 பாடசாலைகள் தேசிய பாடசாலைகளாக தரமுயா்த்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
01. நெடுந்தீவு மகா வித்தியாலயம்
02. வேலணை மத்திய கல்லூரி
03. ஊர்காவற்றுறை சென். அந்தோனியார் கல்லூரி
04. காரைநகர் இந்துக் கல்லூரி
05. வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரி
06. தெல்லிப்பளை யூனியன் கல்லூரி
07. ஸ்கந்தவரோதயா கல்லூரி
08. ஸ்ரீ சோமஸ்கந்தா கல்லூரி – புத்தூர்
09. மெதடிஸ்த பெண்கள் உயர்தர பாடசாலை
10. உடுத்துறை மகா வித்தியாலயம்.
தேசியப் படாசாலைகள் வாிசையில் நெடுந்தீவு மகாவித்தியாலயமும் தரமுயா்த்தப்பட்டிருப்பது நெடுந்தீவுக்கு கிடைத்த வரப்பிரசாதம். ஆசிாியா் நியமணங்கள், மற்றும் இதர அரச வழங்கலில் தேசியப் பாடசாலைக்கான சலுகைகள் வழங்கப்படும் இதனை மையப்படுத்தி எதிா்காலத்தில் நெடுந்தீவு மகாவித்தியாலயம் வளா்ச்சியுறும் பட்சத்தில் நெடுந்தீவின் கல்வி வளா்ச்சியிலும் பாரிய மாற்றத்தினை ஏற்படுத்தும்.
75 வருடத்தில் பயணித்து வரும் நெடுந்தீவு மகாவித்தியாலயம் தேசிய பாடசாலையாக மாற்றப்பட்டது யாவருக்கும் மகிழ்ச்சிக்குாியதே