By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
kumuthini image kumuthini image
  • முகப்பு
  • செய்திகள்
    • நெடுந்தீவு
    • தீவகம்
    • யாழ்
    • வன்னி
    • இலங்கை
    • உலகம்
  • கட்டுரை
  • விளம்பரம்
    • வாழ்த்துக்கள்
    • எழுத்துரு விளம்பரங்கள்
  • அறிவித்தல்
    • இறப்பு அறிவித்தல்
    • துயர் பகிர்வு
Reading: தெல்லிப்பளை வைத்தியசாலை பணியாளர் அடித்துக் கொலை!
Share
Notification
Latest News
செம்மணியில் புதையுண்ட மக்களுக்கான நீதி போராட்டம் “அணையா தீபம்”!
யாழ்ப்பாணம்
இலங்கையில் இரண்டு மாதங்களுக்கான எரிபொருள் கையிருப்பு உள்ளது !
இலங்கைச் செய்தி
நயினாதீவுக்கான கட்டடப் பொருட்களை இறக்க மாற்று துறைமுகம்!
தீவகச் செய்தி
சிறப்பாக இடம்பெற்ற பெரியதம்பனை அறநெறி பாடசாலைக்கு அடிக்கல் நாட்டும் விழா!
வன்னிச் செய்திகள்
சாவகச்சேரி பிரதேசசபை தவிசாளர் தமிழ் அரசுக் கட்சி!
யாழ்ப்பாணம்
Aa
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....
Search
  • Home
    • Home News
  • Categories
  • Bookmarks
    • Customize Interests
    • My Bookmarks
  • More Foxiz
    • Blog Index
    • Sitemap
Follow US
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து.... > Blog > செய்திகள் > யாழ்ப்பாணம் > தெல்லிப்பளை வைத்தியசாலை பணியாளர் அடித்துக் கொலை!
யாழ்ப்பாணம்

தெல்லிப்பளை வைத்தியசாலை பணியாளர் அடித்துக் கொலை!

Last updated: 2023/04/11 at 11:17 PM
Published April 11, 2023 274 Views
Share
1 Min Read
SHARE
சாவகச்சேரி மீசாலை புத்தூர்ச் சந்திப் பகுதியில் நோயாளர் நலன்புரிச்  சங்க பராமரிப்பாளர் ஒருவர் அலவாங்கால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் இன்று(ஏப்ரல் 11) பிற்பகல் 4.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக சாவகச்சேரிப் பொலிஸார் தெரிவித்தனர்.
மீசாலை புத்தூர்ச் சந்திப் பகுதியில் வசித்துவரும் 20 வயதான இளைஞர் ஒருவர் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் மனநல சிகிச்சைக்காக  கடந்த செவ்வாய்க்கிழமை அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் நேற்றைய தினம் குறித்த இளைஞர் வைத்தியசாலையில் இருந்து தப்பி ஓடி  புத்தூர்ச் சந்தியிலுள்ள தனது வீட்டுக்கு வந்துள்ளார்.
இதனால், தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் இளைஞரைப் பராமரித்துவந்த  நோயாளர் நலன்புரிச் சங்கத்தைச் சேர்ந்த நி.நாகச்செல்வன் என்பவரும், இளைஞரின் உறவினர் ஒருவருமாக இளைஞரை மீண்டும் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்வதற்காக வந்திருந்தனர்.
 அப்போது, புகையிரதக் கடவையில்  அமர்ந்திருந்த குறித்த இளைஞரோடு நோயாளர் நலன்புரிச்சங்க  பராமரிப்பாளர் உரையாடியதோடு, இளைஞரின் வீட்டுக்கும் அவரோடு சென்றுள்ளார்.
 இதன்போது இளைஞரின் உறவினர்  முச்சக்கர வண்டியோடு வீதியோரத்தில் காத்திருந்தார். இந்த நிலையில் வீட்டுக்குள் இருந்து  இளைஞர் மட்டும் வெளியே வந்து மீண்டும் புகையிரதக் கடவையில் அமர்ந்து கொண்டார்.
 வீட்டுக்குள் சென்ற நோயாளர் நலன்புரிச் சங்க பராமரிப்பாளரை காணாத இளைஞரின் உறவினர் அவரது தொலைபேசிக்கு அழைப்பெடுத்தார்.
 நீண்ட நேரமாக அழைத்தும் பதில் கிடைக்காததால், புகையிரத வீதியில் அமர்ந்திருந்த இளைஞரிடம் சென்று வினவியுள்ளார்.
இதன்போது, “பராமரிப்பாளரை வீட்டு முற்றத்தில் வைத்து அலவாங்கால் குத்தி கொலை செய்துவிட்டேன்” என இளைஞர் தெரிவித்துள்ளார்.
வீட்டு முற்றத்திற்கு சென்று பார்த்தபோது குறித்த நலன்புரிச் சங்க பராமரிப்பாளர்  முகத்தில் பலத்த காயங்களோடு சடலமாகக் கிடந்துள்ளார்.
இதையடுத்து சாவகச்சேரிப் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் இளைஞரை கைது செய்துள்ளனர்.
சடலமாக மீட்க்கப்பட்டவர் ஆனைக்கோட்டை தெற்கு கூழாவடியைச் சேர்ந்த குடும்பஸ்தரான நி.நாகச்செல்வன் என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

You Might Also Like

செம்மணியில் புதையுண்ட மக்களுக்கான நீதி போராட்டம் “அணையா தீபம்”!

சாவகச்சேரி பிரதேசசபை தவிசாளர் தமிழ் அரசுக் கட்சி!

வாள்வெட்டில் ஈடுபட்ட மூவர் இந்தியா தப்பிச் செல்லுகையில் கைது!

யாழ்ப்பாணத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் பெண் உட்பட கைது !

யாழில் 1000 வீதிகள் அபிவிருத்தி வேலைத் திட்டங்களின் ஆரம்ப நிகழ்வு !!

ஓமந்தை கார் விபத்தில் படுகாயமடைந்த சுவாமிநாத ஐயர் பலி!

வழுக்கையாற்று புனரமைப்பிற்கான பல்கலைக்கழக மாணவர் ஆய்வு ஆரம்பம் – நிலத்தடி நீர், விவசாய தேவைகளை பூர்த்தி செய்ய முயற்சி

யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபராக திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் நியமனம்!!

Anarkali April 11, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Previous Article சம்பியனைத் தனதாக்கியது குருநாகல் மலியதேவ மகளிர் கல்லூரி!
Next Article வேலணை பிரதேச செயலக வளாகத்தில் புதுவருடசந்தை!
- Advertisement -
Ad imageAd image

உங்களுக்கும் வாய்ப்பு....

உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com

பிந்திய செய்திகள்

செம்மணியில் புதையுண்ட மக்களுக்கான நீதி போராட்டம் “அணையா தீபம்”!
இலங்கையில் இரண்டு மாதங்களுக்கான எரிபொருள் கையிருப்பு உள்ளது !
நயினாதீவுக்கான கட்டடப் பொருட்களை இறக்க மாற்று துறைமுகம்!
சிறப்பாக இடம்பெற்ற பெரியதம்பனை அறநெறி பாடசாலைக்கு அடிக்கல் நாட்டும் விழா!

You Might Also Like

யாழ்ப்பாணம்

செம்மணியில் புதையுண்ட மக்களுக்கான நீதி போராட்டம் “அணையா தீபம்”!

June 23, 2025
யாழ்ப்பாணம்

சாவகச்சேரி பிரதேசசபை தவிசாளர் தமிழ் அரசுக் கட்சி!

June 23, 2025
யாழ்ப்பாணம்

வாள்வெட்டில் ஈடுபட்ட மூவர் இந்தியா தப்பிச் செல்லுகையில் கைது!

June 22, 2025
யாழ்ப்பாணம்

யாழ்ப்பாணத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் பெண் உட்பட கைது !

June 22, 2025
யாழ்ப்பாணம்

யாழில் 1000 வீதிகள் அபிவிருத்தி வேலைத் திட்டங்களின் ஆரம்ப நிகழ்வு !!

June 21, 2025
யாழ்ப்பாணம்

ஓமந்தை கார் விபத்தில் படுகாயமடைந்த சுவாமிநாத ஐயர் பலி!

June 21, 2025
யாழ்ப்பாணம்

வழுக்கையாற்று புனரமைப்பிற்கான பல்கலைக்கழக மாணவர் ஆய்வு ஆரம்பம் – நிலத்தடி நீர், விவசாய தேவைகளை பூர்த்தி செய்ய முயற்சி

June 21, 2025
யாழ்ப்பாணம்

யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபராக திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் நியமனம்!!

June 20, 2025

About Us

இலங்கையின் வடக்கே நெடுந்தீவை மையமாகக் கொண்டு செயற்படும் செய்தி இணையத்தளம்

Subscribe

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]

DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....

© Delftmedia All Rights Reserved.

Removed from reading list

Undo
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Lost your password?