தென் கொரிய கப்பல் மீது தாக்குதல் – ஈரான் மீது ட்ரம்ப் குற்றச்சாட்டு

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

கடந்த வாரம் ஹோர்முஸ் நீரிணையில் சிக்கித் தவித்த தென் கொரியாவின் ‘HMM’ நிறுவனத்திற்குச் சொந்தமான சரக்குக் கப்பல் மீது அடையாளம் தெரியாத இரண்டு பொருட்கள் மோதித் தாக்கியுள்ளதாக தென் கொரிய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

‘HMM Namu’ என்ற அந்தப் பெரிய சரக்குக் கப்பலின் பின்பகுதியில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

முன்னதாக, ஒரு வாரத்திற்கு முன்பு ஐக்கிய அரபு அமீரகத்திற்கு அருகே நங்கூரமிட்டிருந்த இதே கப்பலில் வெடிப்புச் சம்பவம் மற்றும் தீ விபத்து ஏற்பட்டதாகத் தகவல்கள் வெளியாகின.

இந்தச் சம்பவத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

அத்தோடு, குறித்த சம்பவம் ஈரானியப் படைகளால் நடத்தப்பட்ட தாக்குதல் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அப்போது குற்றம் சாட்டியிருந்தார்.

இருப்பினும், இந்தத் தாக்குதலுக்குத் தாங்கள் காரணமல்ல என்று ஈரான் திட்டவட்டமாக மறுத்துள்ளது. இந்த அடுத்தடுத்த சம்பவங்களால் அந்தப் பகுதியில் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது.

Share this Article