துன்னாலையில் குழு மோதல்!- இருவர் வாள்வெட்டில் காயம்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

வடமராட்சி, துன்னாலையில் இரு குழுக்களுக்கு இடையே நடந்த மோதலில் இருவர் வாள்வெட்டுக்கு இலக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்தச் சம்பவம் துன்னாலை, வேம்படிப் பகுதியில் நேற்றுமுன்தினம்(செப்ரெம்பர் 20) நடந்துள்ளது. சம்பவத்தில் படுகாயமடைந்த இருவரும் பருத்தித்துறை ஆதார மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

துன்னாலை தெற்கைச் சேர்ந்த 31 மற்றும் 50 வயதுடைய இருவரே தலை மற்றும் கால் பகுதிகளில் படுகாயமடைந்துள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பாக நெல்லியடிப் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Share this Article