இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தின் ஏற்பாட்டில் தெய்வீகக் கிராம நிகழ்வு இன்று (டிசம்பர் 31) திருமுறிகண்டி கிராமத்தில் இடம்பெற்றது.
திருமுறிகண்டி பிள்ளையார் ஆலயத்தில் வழிபாடு மற்றும் கோமாதா பூசையுடன் ஆரம்பமாகி திருமுறிகண்டி இந்து வித்தியாலய மண்டபத்தில் திருமுறிகண்டி பிள்ளையார் ஆலய அறநெறிப் பாடசாலை மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் மற்றும் அதிதிகளின் உரைகளும் இடம் பெற்றதுடன் திருமுறிகண்டி பிள்ளையார் ஆலய அறநெறிப் பாடசாலையில் புதிதாக இணைந்த மாணவர்கள் உட்பட சுமார் 100 மாணவர்களிற்கு “தெய்வீக அன்புச் சிறுவர்கள்” திட்டத்தின் கீழ் கற்றல் உபகரணங்கள் செல்வி, ஞா.மிலானி (கனடா ) அவர்களின் அனுசரணையில் வழங்கி வைக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் திரு.அ.உமாமகேஸ்வரன், திருமுறிகண்டி இந்து வித்தியாலய அதிபர் திரு. பேரின்பநாதன் இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் முல்லைத்தீவு மாவட்ட ‘அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு.சி.மோகனராசா,திருமுறிகண்டி கிராம அலுவலர் திரு.குகநாதன், திருமுறிகண்டி பிரதேசத்தின் சமூக அமைப்புக்களின் தலைவர்கள், அறநெறி ஆசிரியர்கள, மாணவர்கள், பெற்றோர் எனப் பலரும் கலந்துகொண்டனர்.