திருமதி இமானுவேல் ஈஸ்வரன் சொரூபினிக்கு சிறந்த பெண் தொழில் முயற்சியாளர் விருது

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

மகளிர் சிறுவர்கள் அலுவல்கள் மற்றும் சமூக வலுப்படுத்தல் அமைச்சால் நடத்தப்பட்ட சர்வதேச மகளிர் தின நிகழ்வுகள் – 2023 “அவள் தேசத்தின் பெருமை “எனும் தொனிப்பொருளின் கீழ் நேற்றுமுன்தினம் (மார்ச் 8) பத்தரமுல்லை வோட்டர்ஸ் எட்ஜ்யில் நடைபெற்றது.

இந்தநிகழ்வில் யாழ்ப்பாண மாவட்டத்தில் சிறந்த பெண் தொழில் முயற்சியாளருக்கான விருது சங்கானை பிரதேச செயல பிரிவுக்கு உட்பட்ட “அன்பே சிவம் “உலர் உணவு உற்பத்தி நிறுவன பெண் முயற்சியாளர் திருமதி இமானுவேல் ஈஸ்வரன் சொரூபினிக்கு வழங்கப்பட்டது.

நிகழ்வில் பிரதம அதிதியாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கலந்து கொண்டு சிறந்த பெண் தொழில் முயற்சியாளர் திருமதி இமானுவேல் ஈஸ்வரன் சொரூபினிக்கு விருதுகளையும் பரிசில்களையும் வழங்கி கௌரவித்தாா்.

Share this Article