மன்னார் திருக்கேதீஸ்வர ஆலய மகா சிவராத்திரி நிகழ்வு குறித்து ஆராயும் விசேட கலந்துரையாடல் நேற்று (பெப்ரவரி 14) மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் ஏ.ஸ்ரான்லி டிமெல் தலைமையில் மன்னார் திருக்கேதீஸ்வர ஆலய மண்டபத்தில் இடம்பெற்றது.
எதிர்வரும் 18 ஆம் திகதி சனிக்கிழமை இடம்பெறவுள்ள மகா சிவராத்திக்கான முன் ஆயத்த நடவடிக்கைகள் குறித்து இந்த கலந்துரையாடல் அமைந்தது.
இந்தக் கலந்துரையாடலில் திருக்கேதீஸ்வர ஆலய நிர்வாகம், அழைக்கப்பட்ட துறைசார் திணைக்கள அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இதன்போது எதிர்வரும் 18 ஆம் திகதி இடம்பெறவுள்ள மகா சிவராத்திரி குறித்தும் முன்னெடுக்கப்பட வேண்டிய ஏற்பாடுகள் குறித்தும் ஆராயப்பட்டது.
குறித்த கலந்துரையாடலில் பொலிஸார் மற்றும் இராணுவ அதிகாரிகள் கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது அரச தனியார் போக்குவரத்துக்கள், குடிநீர், சுகாதாரம் உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளும் ஆராயப்பட்டது.
மேலும் பாதுகாப்பு, உணவு உள்ளிட்ட விடையங்கள் குறித்து ஆராயப்பட்டதோடு, சகல ஒழுங்குகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக கடந்த காலங்களை விட இம்முறை இலட்சக்கணக்கான மக்கள் நாடளாவிய ரீதியில் வருகை தருவார்கள் என எதிர் பார்க்கப்படுகின்றமையால் அதற்கான முன்னாயத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.