திடீரென சரிந்த இலங்கையின் நாணய பெறுமதி!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

நேற்று முன்தினத்துடன் ஒப்பிடும்போது நேற்று(ஒக்ரோபர் 24) அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ளது.
கடந்த சில நாட்களுடன் ஒப்பிடுகையில் இது தொடர் வீழ்ச்சியாகும்.

இந்தநிலையில், இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நேற்று நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை 331.39 ரூபாவாகவும், கொள்வனவு விலை 320.81 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

மேலும், கனேடிய டொலரின் விற்பனை விலை 243.97 ரூபாவாகவும், கொள்வனவு விலை 233.10 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது. இதன்படி, யூரோ ஒன்றின் விற்பனை பெறுமதி 356.05 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 341.06 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

அதேசமயம், ஸ்டெர்லிங் பவுண்டின் இன்றைய விற்பனை பெறுமதி 408.16 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 392.20 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

Share this Article