தீவகத்தில் வாழ்ந்து வருகின்ற நம் தேச விடிவிற்கென வித்தாகியவர்களின் 50 குடும்பங்களுக்கு வேலணை பிரதேச சபை உறுப்பினர் கருணாகரன் நாவலன் அவர்களின் ஏற்பாட்டில் கடந்த 8 , 9 திகதிகளில் 75000 ரூபாய் பெறுமதிமிக்க உலர் உணவுப்பொதிகள், சுகாதார பாதுகாப்பு பொருட்கள் வழங்கிவைக்கப்பட்டன .
இச்செயற்பாட்டிற்கான நிதிப்பங்களிப்பினை ஜேர்மன் சுகார்ட் சித்திவினாயகர் அறக்கட்டளையினர் வழங்கியிருந்தனர் . தீவகத்தின் வேலணை , புளியங்கூடல் , சரவணை , ஊர்காவற்துறை , புங்குடுதீவு பிரதேசங்களில் பாதுகாப்பு தரப்பினரின் கெடுபிடிகளின் மத்தியிலும் மேற்கொள்ளப்பட்டிருந்த இச்செயற்பாடுகளில் ஜேர்மனி சுகார்ட் சித்திவிநாயகர் அறக்கட்டளையின் இணைப்பாளர் தனுபன் , அபி , மற்றும் தமிழ்த்தேசிய செயற்பாட்டாளர்களான கருணாகரன் குணாளன் , மடூத்தீன் பெனடிக்ற் ( சின்னமணி ) , காவலூர் றமில்டன் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்