தரம் 5 மாணவி துஷ்பிரயோகம் பிரதி அதிபர் காலியில் கைதானார்!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

காலி மாவட்டத்தில் உள்ள ஆரம்ப பாடசாலை ஒன்றின் பிரதி அதிபர் ஒருவர் பாடசாலை மாணவி ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்த குற் றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.

அந்த ஆரம்பப் பாடசாலையில் 05 ஆம் தரத்தில் கல்வி கற்கும் மாணவி ஒருவரே சந்தேகநபரால் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் சிறுமியின் பெற்றோர் பொலிஸில் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் பொலிஸார் பிரதி அதிபரை கைது செய்துள்ளனர்.

கடந்த 6 ஆம் திகதி அந்த பாட சாலையின் பிரதி அதிபரால் மாணவி துஷ்பிரயோகம் செய்யப்பட்டார் என்று இது தொடர்பான முறைப்பாட்டில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி நேற்றுமுன்தினம்(ஒக்ரோபர் 16) கராப்பிட்டிய சட்ட வைத்திய அதிகாரியிடம் சிறுமிக்கு வைத்திய பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்ட பின்னர் சந்தேகத்துக் குரிய பிரதி அதிபர் ஹப ராதுவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். 59 வயதான சந்தேக நபரான பிரதி அதிபர் காலி நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

Share this Article