தரம் 5 மாணவர்களுக்கு மாதிரி வினாத்தாள்கள் வழங்கி வைப்பு!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

யாழ்ப்பாணம் மற்றும் வன்னிப்பகுதியிலுள்ள 45 பாடசாலைகளில் இந்த ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் தோற்றவுள்ள ஆயிரம் மாணவர்களுக்கான மாதிரி வினாத்தாள்கள் இன்று (ஏப்ரல் 15) வழங்கிவைக்கப்பட்டன.

பூமணி அம்மா அறக்கட்டளையின் ஸ்தாபக தலைவரும், சர்வதேச தமிழ் வானொலி பிரான்ஸ்-இலங்கை (ஐ.ரி.ஆர்) பணிப்பாளருமான வேலணை மேற்கு சரவணையைச் சேர்ந்த திரு விசுவாசம் செல்வராசா(பிரான்ஸ்)அவர்களின் ஒழுங்கு படுத்தலில் இந்த மாதிரி வினாத்தாள்கள் வழங்கப்பட்டன.

அமரர் திருமதி.றோசலீன் பூமணி விசுவாசம் அவர்களின் ஒன்பதாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, பூமணி அம்மா அறக்கட்டளை மற்றும் சர்வதேச தமிழ் வானொலியின் தீவிர ஆதரவாளர்களும் அபிமானிகளுமான கனடா மொன்றியலைச் சேர்ந்த திரு.மோகனதாஸ், திருமதி.மோகனதாஸ் சாந்தகுமாரியின் நிதிப் பங்களிப்பில் மாதிரி வினாத்தாள்கள் வழங்கப்பட்டன.

பூமணி அம்மா அறக்கட்டளையின் கல்விப் பிரிவுப் பொறுப்பாளரும் செட்டித்தெரு மெதடிஸ் மிஷன் பாடசாலையின் அதிபருமான க.சசிதரன் தலைமையில் இந்த நிகழ்வு பாடசாலை மண்டபத்தில் இடம்பெற்றது.

Share this Article