தரமற்ற பேரூந்தால் பயணிகள் பெரும் சிரமம்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு – பருத்தித்துறை என பெயரிட்டு சேவையில் ஈடுபடும் அரச பேரூந்து பாவனைக்கு உதவாத நிலையில் காணப்படுவதால் இடைநடுவில் தினமும் பயணிகள் பெரும் அசௌகரியங்களை எதிர்கொள்வதாக கவலை தெரிவித்துள்ளனர்.

அண்மையில் பயணிகளுடன் சென்றபோது பேரூந்தின் முக்கியபாகம் கழன்று விழுந்துள்ளபோதும் ஆபத்துக்கள் எதுவும் இன்றி பயணிகள் தப்பிக்கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த வழித்தடத்திற்கான பேரூந்தினை மாற்றுமாறு பல கோரிக்கைகள் விடப்பட்டும் உரிய தரப்பினர் எந்தவித நடவடிக்கையும் எடுப்பதாக தெரியவில்லையென விசனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பேரூந்தில் ஆசிரியர்கள், அரச அலுவலர்கள்  மற்றும் பொதுமக்கள் எனப் பலர் பயணம் செய்கின்றைமை குறிப்பிடத்தக்கது.

Share this Article