தமிழக மீனவர்கள் 9 பேர் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.நாகப்பட்டினம் மீனவர்கள் சிலர் கோடியக்கரை அருகே கடலில் மீன்பிடித்து கொண்டிருந்துள்ளனர்.
இந்த நிலையில் திடீரென இலங்கை கடற்கொள்ளையர்கள் சிலர் அவர்களை சுற்றிவளைத்து தாக்க ஆரம்பித்துள்ளனர். இந்த எதிர்பாராத தாக்குதலில் 9 மீனவர்கள் காயமடைந்துள்ளனர்.
அத்துடன், மீனவர்களிடம் இருந்த 5 லட்சம் ரூபா மதிப்புள்ள 700 கிலோ மீன்பிடி வலைகள், ஜி.பி.எஸ். கருவிகள் ஆகியவற்றை கொள்ளையர்கள் எடுத்துள்ளனர். மேலும் அவர்களிடம் இருந்த தங்க சங்கிலிகளையும் பறித்து கொண்டு தப்பிச் சென்றுள்ளனர்.
அத்துடன், இலங்கை கடற்கொள்ளையர்கள் தங்களை சித்திரவதை செய்தனர் என நாகை மீனவர்கள் குற்றம் சாட் டியுள்ளனர். காயமடைந்த 9 மீனவர்களும் நாகை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்தச் சம்பவம் குறித்து கடலோரக் காவல்படை பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இலங்கை கடற்கொள்ளையர்களால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது தொடர்ந்து இடம்பெற்று வருகிறது.
இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று மீனவர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர் குறிப்பிடத்தக்கது.