தனியார் பேருந்து தீயில் முற்றாக எரிந்து சேதம்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

மட்டக்களப்பு, காத்தான்குடிப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆரையம்பதி பகுதியில் தனியார் பேருந்தொன்று தீயில் எரிந்து முற்றாக நாசமாகியுள்ளது.

குறித்த தீ விபத்து சம்பவம் இன்று (நவம்பர் 9) அதிகாலை 4.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

மட்டக்களப்பு, கல்முனை பிரதான வீதிக்கருகில் உள்ள வளாகத்தினுள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தனியார் பேருந்தொன்றே தீ பற்றி எரிந்து முற்றாக நாசமாகியுள்ளது.

தீ விபத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

Share this Article