தனியார் கல்வி நிறுவனங்களை கட்டுப்படுத்த யாழில் நடவடிக்கை!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

யாழ் மாவட்டத்தில் இயங்கிவரும் தனியார் கல்வி நிறுவனங்கள் தொடர்பான விவரங்களைச் சேகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதில் சேகரிக்கப்படும் விவரங்களை அடிப்படையாகக் கொண்டுதனியார் கல்வி நிறுவனங்களுக்கான பொறிமுறை மற்றும் கட்டுப்பாடுகளை வகுக்கத் தீர்மானிக்கப்பட்டது.

யாழ்மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற சிறுவர் அபிவிருத்தி குழுக் கூட்டத்திலேயே இந்தத் தீர்மானம் எடுக்கப் பட்டுள்ளது.

யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் சிறுவர்கள் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக ஆராயப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share this Article