நீங்கள் விடா முயற்சியோடு தடைகளை தாண்டி கற்கின்றபோது எதிர்காலத்தில் நற்பிரஜைகளாக எழமுடியும். இத்தகைய தடைகளை தாண்டியவர்களே இத்தீவில் ஆசான்களாக அதிபர்களாக உங்கள் கண் முன்னே இருக்கிறார்கள் என பங்குத்தந்தை அருட்பணி பத்திநாதன் அடிகளார் குறிப்பிட்டார்.
புனித ஜோவான் கல்வியகத்தில் நேற்று(நவம்பர் 21) இடம்பெற்ற சிறுவர் மற்றும் ஆசிரியர் தின நிகழ்வில் பிரதம அதிதியாக பிரசன்னமாகி உரைநிகழ்துகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும், குப்பி விளக்கில் நாங்கள் எரிந்து விடுவோம் என்பதற்காக, நாங்கள் விழித்திருக்கும்போதெல்லாம் அவர்களும் விழித்திருந்தார்கள். பிள்ளைகளை உருவாக்குவதென்பது முற்றுமுழுதாக பெற்றோர் வசமிருக்கிறது. குழந்தைகளுக்காக முன்வாருங்கள் அவர்களோடு கல்வியிலும் கூடவே பயணியுங்கள் என அழைப்புவிடுத்திருந்தார்.
இத்தீவை சார்ந்து வெளிநாடுகளில் வாழுவோர் இவ்வூரை அதிகமாக நேசிக்கின்றனர் என்றும் அவர்களின் அர்பணிப்புக்கள் தியாகங்களால் இக்கல்வியகம் தனது பணியை நேர்த்தியாக ஆற்றியதாகவும் தனது நன்றிகளையும் பகிர்ந்துகொண்டார்.
இலவசமாக கல்வியை வழங்குகின்றபோது அதை தேடிப்பெறுகின்ற பிள்ளைகள் குறைவாகவே இருக்கிறார்கள் என்பதை அவதானிப்பதாகவும் கவலையடைவதாகவும் பிரதம விருந்தினர் உரையில் பங்குத்தந்தை குறிப்பிட்டார்.