தடுப்பூசியால் நான்கு மாத குழந்தை பலி!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read
Newborn's Feet Cradled in Parent's Hand

தடுப்பூசி செலுத்தி ஒருநாளைக்கு பின்னர் திடீரென ஏற்பட்ட நோய் நிலைமை காரணமாக, 4 மாத குழந்தையொன்று உயிரிழந்த சம்பவம் குளியாப்பிட்டிய மருத்துவமனையில் நடந்துள்ளது.

கடந்த சனிக்கிழமை 4 மாத குழந்தைக்கு பண்டுவஸ்நுவர மேற்கு சுகாதார மருத்துவ அதிகாரி அலுவலகத்தால் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

தடுப்பூசி செலுத்தப்பட்ட பின்னர் காய்ச்சல் அறிகுறிகள் ஏற்றட்டுள்ளதுடன், உரிய சிகிச்சைகள் அளிக்கப்பட்ட பின்னரும் அந்தக் குழந்தைக்கு காய்ச்சல் அதிகரித்துள்ளது.

பின்னர் அந்த குழந்தையை குளியாப்பிட்டிய போதனா மருத்துவமனையில் அவரின் பெற்றோர் நடவடிக்கை எடுத்திருந்ததுடன், குழந்தை உயிரிழந்து விட்டது என்று மருத்துவமனைத் தகவல்கள் குறிப்பிடுகின்றன.

குழந்தையின் சடலம் தற்போது, குருநாகல் போதனா மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்படுகிறது.

உடற்கூற்றுப் பரிசோதனையின் பின்னரே குழந்தைக்கு செலுத்தப்பட்ட தடுப்பூசியின் தாக்கம் உயிரிழப்பின்போது உள்ளதா என்பதை அறிந்துகொள்ள முடியும் என்று மருத்துவமனைத் தகவல்கள் தெரிவித்தன.

Share this Article