நாட்டில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுகாதாரஅமைச்சு தெரிவித்துள்ளது.
அதன்படி, நாட்டில் இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் 27,197 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் 9 டெங்கு மரணங்கள்பதிவாகியுள்ளன.
அதிகளவான டெங்கு நோயாளர்கள் மேல் மாகாணத்திலிருந்து பதிவாகுவதாகச்சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக டெங்கு நோய் பரவக்கூடியஅபாயம் காணப்படுவதால் பொதுமக்கள் அனைவரும் தங்களது சுற்றுச்சூழலைச்சுத்தமாக வைத்திருக்குமாறு சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது