நோயாளியின் மோதிரம், பணம், கைப்பை திருடியவரை இனம் காண- பொதுமக்களிடம் உதவி கோரல்!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நோயாளி ஒருவருடன் சகஜமாகபேசி, அவருடைய மோதிரம் மற்றும் சிறுதொகைப்பணம், கைப்பைபோன்றவற்றை கொள்ளையடித்துச் சென்ற சந்தேக நபர் சிசிரிவி கமராவின்மூலம் அடையாளம் காணப்பட்டுள்ளதாக வைத்தியசாலை பணிப்பாளர்தெரிவித்துள்ளார்.

இந்த சந்தேக நபர் தொடர்பாக விபரம் தெரிந்தால் யாழ்ப்பாணம்பொலிஸாருக்கோ வைத்தியசாலை நிர்வாகத்துக்கோ தெரிவிக்குமாறுபொதுமக்களுக்கு அவர் அறிவித்துள்ளார்.

யாழ். போதனா வைத்தியசாலையில் வெள்ளிக்கிழமை (ஜூன்21) நோயாளர்களின்பார்வையாளர் நேரத்திலேயே நூதனமான முறையில் இந்த திருட்டுச் சம்பவம்இடம்பெற்றுள்ளது.

இந்த நோயாளி கடந்த 19ஆம் திகதி சத்திர சிகிச்சை விடுதியில்அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், வைத்தியசாலைக்கு அனுமதிக்கப்படும் நோயாளிகள் தங்கஆபரணங்களையோ பெறுமதியான பொருட்களையோ கொண்டு வரவேண்டாம்எனவும் தெரியாத நபர்களுடன் அவதானமாக இருக்கவேண்டும் எனவும்அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Share this Article