சில அரச சேவைகளை அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதன்படி மின்சாரம், எரிபொருள், விமான நிலையம் மற்றும் துறைமுகம் தொடர்பான சேவைகள் அத்தியாவசிய சேவைகளாக மாற்றப்பட்டுள்ளன.
சமூகத்திற்கு அத்தியாவசியமான சேவைகள் மற்றும் பொருட்களை வழங்கும் அனைத்து நிறுவனங்களும், மின்சாரம், பெட்ரோலியம், எரிபொருள் மற்றும் வெளியேற்றம், போக்குவரத்து, துறைமுகங்கள் மற்றும் விமான நிலையங்களில் இருந்து பொருட்களை சேமித்தல் ஆகியவை வர்த்தமானியில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
அதன்படி, கீழே பட்டியலிடப்பட்ட சேவைகளை வழங்குவதில் ஈடுபட்டுள்ள எந்தவொரு பொதுக் கூட்டுத்தாபனம், அரசாங்க திணைக்களம், உள்ளுராட்சி அதிகாரசபை, கூட்டுறவுச் சங்கம் அல்லது திணைக்களம், கூட்டுத்தாபனம்,உள்ளுராட்சி அதிகார சபை கூட்டுறவுச் சங்கமாக இருக்கும் எந்தவொரு கிளை என்பன இனி அத்தியாவசிய சேவைகளாக கருதப்படும்.
இதன்படி மின்சார விநியோகத்துடன் இணைக்கப்பட்ட அனைத்து சேவைகளும் – பெட்ரோலிய பொருட்கள் மற்றும் எரிபொருளின் வழங்கல் அல்லது விநியோகம் – சுங்கச் சட்டத்தின் நோக்கங்களுக்காக வரையறுக்கப்பட்டுள்ளபடி, எந்தவொரு துறைமுகத்திலும் உள்ள கப்பல்களில் இருந்து உணவு அல்லது பானம், நிலக்கரி, எண்ணெய் அல்லது எரிபொருளின் பொருட்களை வெளியேற்றுதல், வாகன தரையிறக்கம், சேமிப்பு, விநியோகம், விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்கள் உட்பட விமான போக்குவரத்து சேவைகளுக்கான வசதிகளை வழங்குதல் மற்றும் பராமரித்தல் என்பன வர்த்தமானிக்குள் உள்ளடக்கப்பட்டுள்ளன.