2024 ஆம் ஆண்டின் முற்பகுதியில் ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கு ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துவிட்டார் என்று அரசியல் வட்டாரங்களில் இருந்து
அறியமுடிகின்றது.
இது தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களுடன் அவர் ஆலோசனை நடத்தியுள்ளார் எனவும், விரைவில் மொட்டுக் கட்சியினருடனும்
சந்திப்பு நடத்தவுள்ளார் எனவும் அரசியல் வட்டாரங்களில் இருந்து தெரியவருகின்றது.
மாகாண சபைத் தேர்தலை முதலில் நடத்தில் அதில் அரசுக்குப் பின்னடைவு ஏற்பட்டால் அது ஜனாதிபதித் தேர்தல் முடிவில் தாக்கம் செலுத்தும் என்பதாலேயே ஜனாதிபதி தேர்தலை முதலில் நடத்துவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது.
அதன்பின்னரே மாகாண சபைத் தேர்தல் மற்றும் பொதுத்தேர்தல் என்பன இடம்பெறும்.