செம்மணி மனிதப் புதைகுழியில் இரண்டாம் கட்ட அகழ்வாய்வின் 34வதுநாளான நேற்றைய தினம் (ஓகஸ்ட் 26) 16 எலும்புக்கூட்டு தொகுதிகள்அடையாளம் காணப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்டவர்களைபிரதிநிதித்துவப்படுத்தும் சட்டத்தரணி ரணிதா ஞானராஜ் தெரிவித்துள்ளார்.
செம்மணி மனித புதைகுழியின் இரண்டாம் கட்டத்தின் மூன்றாம் பகுதி அகழ்வுபணிகள் கடந்த திங்கட்கிழமை (ஓகஸ்ட் 25) ஆரம்பிக்கப்பட்ட நிலையில்நேற்றைய தினம் இரண்டாவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது, ஏற்கனவே அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்ட அகழ்வாய்வுதளங்களை மேலும் விஸ்தரிக்கும் நடவடிக்கைகளின் போது புதிதாக 16 எலும்புக்கூட்டு தொகுதிகள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.
அவற்றில் சிறுவர்களுடையது என சந்தேகிப்படும் எலும்புக்கூட்டு தொகுதிகளும், ஆடையை ஒத்த துணியும் அடையாளம் காணப்பட்டுள்ளது.