செம்மணி பகுதியில் நேற்று இடம்பெற்ற கோர விபத்தில் இளைஞர் பலி!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் நேற்றையதினம் (ஒக்.13) பிற்பகல் 4.30 மணியளவில் இடம்பெற்ற கோர விபத்தில்இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம்துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

வடமராட்சி கிழக்கு உடுத்துறையைப் பகுதியைச் சேர்ந்த உதைப்பந்தாட்டநடுவரான  யூட்  (வயது-27) என்பவரே விபத்தில் உயிரிழந்துள்ளார்.

மோட்டார் சைக்கிளும் பேருந்தும் நேருக்கு நேர் மோதி மோட்டார் சைக்கிளில் பயணித்தவரே உயிரிழந்ததுடன் இதன்போது சம்பவத்தில் சிக்கி முச்சக்கரவண்டி ஒன்றும் இதனால் தடம் புரண்டுள்ளதுடன் அதில் பயணித்தோர் காயமின்றி தப்பித்ததுடன் முச்சக்கரவண்டி சேதமடைந்தது.

உயிரிழந்தவரின் சடலம்  யாழ்.போதனா வைத்தியசாலையில்வைக்கப்பட்டுள்ளதுடன் விபத்து குறித்த விசாரணைகளை பொலிஸார்மேற்கொண்டு வருகின்றனர்.

Share this Article