செம்பியன்பற்றில் அடித்து உடைக்கப்பட்ட மாதா சொரூபம்!- பொலிஸில் முறைப்பாடு!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

வடமராட்சி கிழக்கு செம்பியன்பற்று தனிப்பனை வடக்கில் குடும்பஸ்தர் ஒருவரின் காணிக்குள் இருந்த மாதா சொரூபம் மூன்றாவது தடவையாகவும் அடித்து நொறுக்கப்பட்டுள்ளது.

நபர் ஒருவர் மதுபோதையில் அட்டகாசம் செய்வதாக மருதங்கேணி பொலிஸாரிடம் அங்கு வசிக்கும் குடும்பஸ்தர் ஒருவர் பொலிஸில் முறைப்பாடு பதிவு செய்திருந்தார்.

இந்த நிலையில், இதனை அறிந்த மதுபோதையில் இருந்த குறித்த நபர் நேற்றுமுன்தினம்(செப்ரெம்பர் 28) இரவு காணிக்குள் அத்துமீறி நுழைந்து அங்கே நிறுவப்பட்டிருந்த மாதா சொரூபத்தை அடித்து நொறுக்கியுள்ளார்.

குறித்த நபர் குறித்த மாதா சொருபத்தை மூன்றாவது தடவையாக அடித்து நொறுக்கியுள்ளார் என்று பாதிக்கப்பட்டோர் தெரிவிக்கின்றனர்.

Share this Article