செப். 01 முதல் யாழ்ப்பாணத்தில் பாஸ்போர்ட் பெறலாம் !!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

இலங்கை உள்நாட்டலுவல்கள் அமைச்சின் அறிவிப்பின்படி, யாழ்ப்பாணத்தில்பாஸ்போர்ட் வழங்கும் பணி 2025 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 01ஆம் திகதிமுதல் ஆரம்பிக்கப்படவுள்ளது.

இதுவரை பாஸ்போர்ட் பெறும் நோக்கில் கொழும்பு, வவுனியா போன்றஇடங்களுக்கு செல்ல வேண்டிய சிரமம் இருந்த நிலையில், இனி யாழ்ப்பாணமக்களுக்கு தங்களது மாவட்டத்திலேயே பாஸ்போர்ட் தொடர்பான சேவைகளைஎளிதாகப் பெறும் வசதி கிடைக்கவுள்ளது.

இந்தச் சேவை தொடங்கப்படுவது, வட மாகாண மக்களுக்கு நேரம் மற்றும் செலவுகுறைவாகும் விதத்திலும், மக்கள் நலனுக்கான நிர்வாகப் பணிகள் நேரடியாகமக்களுக்கு சென்றடையும் வகையிலும் ஒரு முக்கிய முன்னேற்றமாகக்கருதப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share this Article