சென். பற்­றிக்ஸ் – யாழ்ப்­பா­ணக் கல்­லூரி பொன் அணி­க­ளின் போர் நாளை ஆரம்­ப­ம்!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

வட்­டுக்­கோட்டை யாழ்ப்­பா­ணக் கல்­லூ­ரிக்­கும், யாழ்ப்­பா­ணம் சென். பற்­றிக்ஸ் கல்­லூ­ரிக்­கும் இடை­யி­லான ‘பொன் அணி­க­ளின் போர்’ துடுப்­பாட்­டத் தொட­ரின் 106ஆவது ஆட்­டம், வட்­டுக்­கோட்டை யாழ்ப்­பா­ணக் கல்­லூரி மைதா­னத்­தில் நாளை(பெப்ரவரி 24), நாளை­ம­று­தி­னம் (பெப்ரவரி 25) என இரு தினங்­கள் இடம்­பெ­ற­வுள்­ளது.

இந்­தத் தொட­ருக்கு எஸ்.எல்.ரி. மொபிட்­டல் அனு­ச­ரணை வழங்­கு­கின்­றது. தொட­ருக்­கான வீரர்­கள் அறி­முக நிகழ்­வும், கிண்­ணத்தை அறி­மு­கம் செய்­து­வைக்­கும் நிகழ்­வும் வட்­டுக்­கோட்டை யாழ்ப்­பா­ணக் கல்­லூ­ரி­யில் நேற்று இடம்­பெற்­றது.

கடந்த வரு­டம் நடை­பெற்ற பொன் அணி­க­ளின் போரில் யாழ்ப்­பா­ணம் சென். பற்­றிக்ஸ் கல்­லூரி அணி வெற்­றி­பெற்­றி­ருந்­தது. இம்­முறை சொந்த மைதா­னத்­தில் கள­மி­றங்­கு­வ­தால் இந்­தத் தோல்­விக்­குப் பதி­லடி கொடுக்­கும் முனைப்­பில் வட்­டுக்­கோட்டை யாழ்ப்­பா­ணக் கல்­லூரி அணி கள­மி­றங்­கு­கின்­றது.

இரு அணி­க­ளுக்­கும் இடை­யி­லான ராஜன் கதிர்­கா­மர் கிண்­ணத்­துக்­கான ஆட்­டம் (ஒரு­நாள் ஆட்­டம்) மார்ச் 4 ஆம் திக­தி­யும் ரி 20 ஆட்­டம் மார்ச் 7ஆம் திக­தி­யும் இடம்­பெ­ற­வுள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது.

Share this Article