புனித பத்திரிசியார் கல்லூரியின் 175 ஆவது ஆண்டு நிறைவினை முன்னிட்டுஞாபகார்த்த முத்திரை வெளியீடு கல்லூரி பிரதி அதிபர் தலைமையில் கடத்த வெள்ளிக்கிழமை (ஜூலை25) கல்லூரி மத்தியூஸ் மண்டபத்தில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ்ப்பாண மறை மாவட்ட ஆயர்பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களும், சிறப்பு விருந்தினராகயாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு மருதலிங்கம் பிரதீபன் அவர்களும்கலந்து கொண்டார்.
புனித பத்திரிசியார் கல்லூரியின் 175 ஆவது ஆண்டு நிறைவினை முன்னிட்டுவெளியிடப்பட்ட முதலாவது ஞாபகார்த்த முத்திரையினை யாழ்ப்பாண மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை அவர்களுக்கும், இரண்டாவது ஞாபகார்த்தமுத்திரையினை அரசாங்க அதிபருக்கும் இலங்கை தபால் திணைக்கள பிரதித்தபால்மா அதிபரால் உத்தியோகபூர்வமாக வழங்கி வெளியிடப்பட்டது.
இந் நிகழ்வில் கல்லூரி உப அதிபர்கள், ஆசிரியர்கள், பழைய மாணவர்கள் மற்றும்நலன்விரும்பிகள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.