ஊரும் உறவும் நெடுந்தீவு அமைப்பின் ஏற்பாட்டில் நெடுந்தீவினை காதல் செய்வோம் எனும் தொனிப்பொருளில் நெடுந்தீவு மண்ணில் நெகிழிக் கழிவுகள் (பிளாஸ்டிக் கழிவுகள்) இல்லாத தீவாக மாற்றுவோம் எனும் செயற்றிட்டத்தின் முதல் நாள் ஆரம்ப நிகழ்வு கடந்த 14ம் திகதி (பெப்ரவாி 14) அன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.
பிரதேச சபைக்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்ட இம் முதல் நாள் நிகழ்வில் நெடுந்தீவு பிரதேச செயலாளா் மதிப்பிற்குாிய திரு.எவ்.சி.சத்தியசோதி அவா்கள் கலந்து கொண்டு நெகழிக்கழிவுகளால் ஏற்படும் ஆபத்துக்கள் குறித்தும் சுகாதர வழிகாட்டுதல்கள் குறித்தும் கருத்துரை வழங்கி செயற்றிட்டம ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இச் செயற்றிட்டத்தில் பொதுச்சுகாதார பாிசோதகா், சமுக மட்ட அமைப்பின் உறுப்பினா்கள் சிறுவா்கள் என பலரும் கலந்து கொண்டனா் பிரதேச சபை சந்தியில் இருந்து ஆரம்பித்து சந்தைக்கடை சந்தி ஊடாக கடற்கரை பிரதேசம் சென்று மணற்கடற்கரை வரையான பிரதேசங்கள் துப்பரவு செய்யப்பட்டதுடன், கடற்கரையும் முதல் நாளில் சுத்தம் செய்யப்பட்டது.
இதன் தொடா்ச்சியாக பல்வேறு செயற்பாடுகள் செய்வதற்கான ஆயத்தங்கள் செய்யப்பட்டிருப்பதாகவும் தொடா்ச்சியாக பல மட்டங்களில் இச் செயற்பாடு இடம் பெறும் எனவும் ஊரும் உறவும் அமைப்பினா் தொிவித்துள்ளனா்.