யாழ்ப்பாண மாவட்ட சுகாதார மேம்பாட்டுக் குழுக் கூட்டம் மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் அவர்களின் தலைமையில் நேற்று (நவம்பர் 20) பிற்பகல் 2.30மணிக்கு மாவட்ட செயலக கேட்போா் கூடத்தில் நடைபெற்றது.
இதில் டெங்குக் கட்டுப்பாடு தொடர்பாக விஷேடமாக கலந்துரையாடப்பட்டதோடு, யாழ் மாவட்டத்தில் தற்போதைய டெங்கு நிலவரம் தொடர்பாகவும், பிரதேச செயலக ரீதியாக டெங்கு ஒழிப்பு தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட முற்காப்பு நடவடிக்கைகள் தொடர்பான விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.
குறிப்பாக கிராம மட்டக்குழுக்களை இயங்க வைத்து பலப்படுத்தல், குறிப்பிட்ட காலவரையறைக்குள் தொடர்ச்சியாக தண்ணீர் தேங்கும் கொள்கலன்களை அகற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளல் தொடர்பாகவும், ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தால் மேற்கொள்ளப்படவுள்ள டெங்கு விழிப்புணர்வு பணி நிகழ்ச்சித்திட்டம் மற்றும் மாணவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்வு தொடர்பான விடயங்களும் கலந்துரையாடப்பட்டன.
இக் கூட்டத்தில் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் , மேலதிக அரசாங்க அதிபர் ம.பிரதீபன் மற்றும் முப்படையினர் , வைத்தியர்கள் , பிரதேச செயலாளர்கள், பொது சுகாதார பரிசோதகர்கள், பிரதேச சபை மற்றும் நகரசபை அதிகாரிகள், பொலிஸ் அதிகாரிகள் , வலயக்கல்விப் பணிப்பாளர்கள், வீதி அபிவிருத்தி அதிகாரசபை அதிகாாிகள், ரூபவாஹினி கூட்டுத்தாபன பிரதிநிதிகள், லயன்ஸ் கழக உறுப்பினர்கள் மற்றும் துறை சாா் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.