சீனாவின் நட்புறவால் இலங்கைக்கு கிடைத்த மிகப்பெரிய வெகுமதி
பொலனறுவையில் அமைக்கப்பட்ட தெற்காசியாவின் மிகப்பெரிய சிறுநீரக நோயாளிகளுக்கான மருத்துவமனை இன்னும் சில தினங்களில் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக திறக்கப்படவுள்ளது.
இலங்கை-சீன நட்புறவின் அடிப்படையில் கட்டி முடிக்கப்பட்ட இந்த மருத்துவமனை, நாடு முழுவதும் உள்ள சிறுநீரக நோயாளிகளுக்கான நீண்டகால தேவையை பூர்த்தி செய்யவுள்ளது.
இந்த மருத்துவமனையின் கட்டுமானம் 2018 ஜூலை 21 ஆம் திகதி முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் அடிக்கல் நாட்டி வைக்கப்பட்ட தொடங்கப்பட்டது.
இந்த மருத்துவமனையில் 204 படுக்கைகள் உள்ளன. இதில் 100 டயாலிசிஸ் இயந்திரங்கள், சிறுநீரக மாற்று சிகிச்சையில் நிபுணத்துவம் பெற்ற சத்திரசிகிச்சை கூடங்கள், அண்மைய ஆய்வகங்கள் மற்றும் பிற நவீன தொழில்நுட்பங்கள் உள்ளன.