சிறைச்சாலையில் பரவிய பற்றீரியா காய்ச்சல்- கைதிகள் இருவர் மரணம்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

காலி சிறைச்சாலையில் பரவிய மெனிங்கோகோகல் பற்றீரியா காய்ச்சலால் கைதிகள் இருவர் உயிரிழந்தனர்.

இதேநேரம், கைதிகள் ஐவர் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்று சிறைச்சாலை பேச்சாளர் தெரிவித்தார்.

சிறைக் கைதிகளிடையே மெனிங்கோகோகல் எனப்படும் பற்றீரியா காய்ச்சல் பரவுவதாக கராப்பிட்டி போதனா மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவித்தனர்.

மெனிங்கோகோகல் பற்றீரியா குழந்தைகளுக்கு அதிக தீங்கு விளைவிக்கிறது. எனினும், போதைப் பொருள் பாவனையால் உடல்நலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு இது ஆபத்தானது என்றும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.

Share this Article