சிறுவர் பாலியல் துர்நடத்தை குற்றவாளிகளின் பெயர் பட்டியலைத் தயாரிக்க எதிர்பார்ப்பதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது.
குறித்த நபர்களால் சிறுவர்களுக்கு ஏற்படும் ஆபத்துக்களைக் கருத்திற்கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்த அதிகார சபையின் தலைவர் சிரேஷ்ட விரிவுரையாளர் உதய குமார அமரசிங்க தெரிவித்துள்ளார்.
சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டார்.
கடந்த வருடத்தில் சிறுவர்கள் மீதான பாலியல் துர்நடத்தை சம்பவங்களில் ஓரளவு அதிகரிப்பு காணப்படுவதாகவும் 2022 ஆம் ஆண்டில் இலங்கை முழுவதும் 18 வயதுக்குட்பட்ட சிறுமிகளை துர்நடத்தைக்கு உட்படுத்திய 1,618 சம்பவங்கள் பதிவாகியுள்ளதுடன், இது 2023 ஆம் ஆண்டில் 1,639 ஆக காணப்படுகிறது.
2022 ஆம் ஆண்டில் 1,232 பாலியல் வன்கொடுமைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும், 2023 ஆம் ஆண்டில் அவ்வாறான சம்பவங்கள் 1,497 ஆக அதிகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும், 2022 ஆண்டில் 13 சிறுவர் பாலியல் துர்நடத்தைக்கு உட்படுத்தப்பட்டதுடன் 2023 ஆண்டில் அது 22 ஆக பதிவாகியுள்ளதாகவும் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் தலைவர் அமரசிங்க மேலும் குறிப்பிட்டுள்ளார்.