சிறுவர்களை இலக்கு வைத்த போதைக்கு அடிமையான பெண் – யாழில் சிக்கிய கும்பல்!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

பாடசாலை மாணவர்களுக்கு ஐஸ் போதைப் பொருளை கொடுத்து அவர்களைப் போதைப் பொருளுக்கு அடிமையாக்கும் கும்பல் ஒன்று யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் பெண் என்றும் ஏனையோர் ஆண்கள் என்றும் யாழ்ப்பாணம் மாவட்டக் குற்றத் தடுப்புப் பிரிவுப் பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட பெண் யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் தாதியாகப் பணியாற்றுகின்றார். இவர் ஐஸ் போதைப் பொருளுக்கு அடிமையானவர்.

ஏனைய நால்வரில் ஒருவர் யாழ்ப்பாணத்தில் கடை வைத்திருப்பவர் என்று தெரிவிக்கப்படுகின்றது. அவரே ஐஸ் போதைப் பொருளை விநியோகித்துள்ளார்.

யாழ்ப்பாணம் நகரப் பகுதியில் சிறுவர்களுக்கும், இளைஞர்களுக்கும் அவர்களை அறியாது போதைப் பொருளை வேறு பொருள்களுடன் கலந்து கொடுத்து அவர்களைப் போதைக்கு அடிமையாக்கும் முயற்சியை இந்தக் கும்பல் மேற்கொண்டுள்ளது. கைது செய்யப்பட்ட பெண் இதற்காகப் பயன்படுத்தப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் மாவட்டக் குற்றத் தடுப்புப் பிரிவுப் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Share this Article