சிறுவர் இல்லத்தில் இருந்து காணாமல்போன சிறுமிகள் மீட்பு

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

உரும்பிராயிலுள்ள சிறுவர் இல்லம் ஒன்றில் இருந்து காணாமல் போயிருந்த 3 சிறுமிகளும் கோப்பாய் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளனர்.

உரும்பிராயிலுள்ள சிறுவர் இல்லம் ஒன்றில் இருந்து 14, 15 மற்றும் 16 வயதுடைய சிறுமிகள் காணாமல் போயிருந்தனர் என்று கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட கோப்பாய் பொலிஸார் அந்தச் சிறுமிகளை பருத்தித்துறைப் பகுதியில் மீட்டுள்ளனர். சிறுவர் இல்லத்தில் வசிப்பதற்கு விருப்பம் இன்மையாலேயே அங்கிருந்து சென்றோம் என்று சிறுமிகள் தங்கள் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளனர்.

விசாரணைகளின் பின்னர் சிறுமிகள் மீண்டும் சிறுவர் இல்லத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

Share this Article