யாழ்ப்பாணத்தில் சிறுவன் உட்பட நால்வர் ஹெரோயின் போதைப்பொருளுடன்நேற்று (செப். 10) கைது செய்யப்பட்டனர்.
16, 18, 20 மற்றும் 22 வயதுடைய நால்வர் 170 மில்லி கிராம் ஹெரோயினுடன்இவ்வாறு கைது செய்யப்பட்டனர்.
யாழ்ப்பாணம் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும்பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், யாழ்ப்பாணம் மாவட்ட போதைப்பொருள் தடுப்பு பொலிஸாரால் இந்த கைதுநடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடம் பொலிஸார் விசாரணைகளைமேற்கொண்டு வருகின்றனர்.