நெடுந்தீவு நற்குண முன்னேற்ற அமைப்பின் வருடாந்த வர்த்தகச் சந்தை நிகழ்வானது இன்று ஞாயிற்றுக்கிழமை (21.12) காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நிலைய வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது

அத்துடன் நிலையத்தில் இடம்பெறும் தையல் பயிற்சியில் பங்குபற்றும் பயிற்சியாளர்களது தைத்த ஆடைக் கண்காட்சியும் இடம்பெற்றது

நிலைய மாணவர்கள் அனைவரும் தம்மால் முடிந்தளவான பொருட்களை குறித்த சந்தையில் விற்பனை செய்ததுடன், பெற்றோர்களும் தமது பிள்ளைகளுடன் குறித்த இவ் விற்பனை நடவடிக்கையில் ஈடுபட்டனர்

இவ் வர்த்தகச் சந்தையில் பொதுமக்களும் தங்கள் விற்பனை நடவடிக்கையில் ஈடுபட அனுமதி வழங்கப்பட்டதுடன் உணவுப் பொருட்கள், உள்ளூர் உற்ப்பத்திப் பொருட்கள், கைவினைப் பொருட்கள், ஆடை அலங்காரப் பொருட்கள் என அனைத்து வகையான பொருட்க்களும் இன்று சந்தைப்படுத்தப்பட்டதுடன் பொதுமக்களும் பொருட்கொள்வனவில் ஆர்வத்துடன் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது