நெடுந்தீவு மகாவித்தியாலயத்தில் திருத்தம் செய்யப்பட்ட கட்டிடங்கள் இன்றையதினம் (பெப்ரவரி 19) மதியம் 01.30 மணிக்கு வித்தியாலய முதல்வர் ஜயாத்துரை தயாபரன் தலமையில் இடம்பெற்ற நிகழ்வில் சம்பிரதாய பூர்வமாக திறந்து வைக்கப்பட்டன.
பாடசாலை அலுவலகத்தினை வடக்கு மாகாண கல்வி கலாசார விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் செயலாளர் எம்.பற்றிக் டிரஞ்சன் அவர்களும் , மாநாட்டு மண்டபத்தினை நெடுந்தீவு பிரதேச செயலாளர் திருமதி நிவேதிகா கேதீசன் அவர்களும் ,ஆசிரியர் ஓய்வறையினை தீவக கல்வி வலயத்தின் கல்விப் பணிப்பாளர் ரி.ஞானசுந்தரம் அவர்களும் , சிற்றூண்டி சாலையினை வடக்கு மாகாண கல்வி கலாசார விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் திட்டமிடல் பணிப்பாளர் வி.சொக்கநாதன்அவர்களும் வைபவ ரீதியாக திறந்து வைத்தமை குறிப்பிடத்தக்கது.
இந் நிகழ்வில் வடக்கு மாகாண கல்வி கலாசார விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் செயலாளர் எம்.பற்றிக் டிரஞ்சன் அவர்கள் மற்றும் சிறப்பு அதிதிகளாக நெடுந்தீவு பிரதேச செயலாளர் திருமதி நிவேதிகா கேதீசன் அவர்களும் தீவக கல்வி வலயத்தின் கல்விப் பணிப்பாளர் ரி.ஞானசுந்தரம் அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.
இந் நிகழ்வில் அயற்பாடசாலை அதிபர்கள், மாணவர்கள், பழைய மாணவர்கள், பெற்றோர்கள் , நலன்விரும்பிகள் என பலர் கலந்து சிறப்பித்தருந்தமை குறிப்பிடத்தக்கது.
எமது DelftMedia குழுமத்தின் அனுசரணையுடன் இன்றைய திறப்புவிழா நிகழ்வுகள் யாவும் நேரலையில் ஒளிபரப்பாகியமை சுட்டிக்காட்டத்தக்கது.