சிறப்பாக ஆரம்பமாகிய தொழில் திணைக்களத்தின் யாழ் அலுவலக நடமாடும் சேவை!!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

தொழில் திணைக்களத்தின் நடமாடும் சேவை வாரத்தின் முதல் நாள் நிகழ்வுகள் இன்றையதினம் (செப். 22)  யாழ்ப்பாண தொழில் அலுவலகத்தில் சிறப்பாக இடம்பெற்றது.

தொழில் அமைச்சின் பிரதி அமைச்சர் மஹிந்த ஜெயசிங்ஹ  மற்றும் குழுவினரின் பங்குபற்றுதலுடன் இடம்பெற்ற நடமாடும் சேவையின்போது யாழ் மாவட்ட உதவி தொழில் ஆணையாளர் அ.அன்ரன் தனேஸ் மற்றும் யாழ்மாவட்ட தொழில் அலுவலர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது உறுப்பினர்களை பதிவு செய்து கொள்ளும் அங்கத்தவர் அட்டையினை (“பி“ பத்திரம்) பிரதி அமைச்சர் வைபவரீதியாக பயனாளிகளுக்கு வழங்கி வைத்ததுடன் இன்றையதினம் சுமார் 101 பேருக்கு “பீ” பத்திரம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தொடர்ந்து வடமாகாண பிரதி தொழில் ஆணையாளர் அலுவலகம், யாழ் மாவட்ட தொழில் அலுவலகம் , பொறியியலாளர் அலுவலகம் என்பவற்றை பார்வையிட்டதுடன் அலுவலக தேவைகள் குறித்தும் ஆராய்ந்து சென்றமை குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து இவ்வாரத்தில் ஊழியர்களின் தீர்க்கப்டாத ஊழியர் சேமலாப நிதி (EPF) மற்றும் அதனுடன்தொடர்புபட்ட பிணக்குகளுக்கு தீர்வு காண்பதற்கான நடமாடும் சேவைகளைப் பெற்றுக்கொள்ளமுடியும்.

தொழில் திணைக்களத்தின் நடமாடும் சேவை வாரத்தின் முதல் நாளிலேயே பெருமளவானோர் கலந்து பயனடைந்துள்ளதுடன் தொடர்ந்து வரும் நாட்களிலும் தேவையுடையோர் கலந்து கொண்டு பயனடையுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share this Article