இனப்படுகொலைக்கு இலக்கான தாயகத் தமிழ் மக்களின் நினைவாகவும், அவர்களின் நினைவு நாட்களில் மலர் தூவி வணக்கம் செலுத்துவதற்கும் சிட்னி நகரில் நிரந்தர ‘தமிழர் நினைவுத் தூபி’ ஒன்று திறக்கப்பட்டுள்ளது.

தமிழர் இனவழிப்பு நினைவு தூபி திறப்பு நிகழ்வு நேற்று (16/05) சனிக்கிழமை காலை நடைபெற்றது.
Cumberland நகர சபை முதல்வர் பங்கேற்று, நினைவுத் தூபியை திறந்து வைத்தார். சிட்னியில் உள்ள Pendle Hill Civic Park பொது இடத்தில், Cumberland நகர சபையின் பேராதரவுடன் இந்த நினைவுத் தூபி நிறுவப்பட்டுள்ளது.
‘தமிழர் ஒருங்கிணைப்புக் குழு – சிட்னி’ அமைப்பின் முன்னெடுப்பில், சிட்னியிலுள்ள அனைத்துத் தமிழர் அமைப்புகளின் ஆதரவோடும் நினைவுத்தூபி நிறுவப்பட்டுள்ளது.
அவஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உருவாக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி, வெறும் கற்களாலும் சிலைகளாலும் ஆன ஒரு கட்டமைப்பு அல்ல. அது தமிழர் இனத்தின் துயர வரலாறு, போராட்ட நினைவு, இனஅழிப்பு வேதனை மற்றும் நீதிக்கான தொடர்ச்சியான அழைப்பின் அடையாளமாக திகழ்கிறது. உலகம் முழுவதும் பரவி வாழும் ஈழத் தமிழர்களுக்கு, முள்ளிவாய்க்கால் என்பது ஒரு புவியியல் இடம் மட்டுமல்ல. அது அழிக்கப்பட்ட உயிர்களின் சாட்சியமும், மறக்க முடியாத அடையாளமும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.